1:130 திருவையாறு

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்தபோதுஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி, அம் சொலீர், பலி! என்னும் அடிகள் கோயில்
கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.

கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு உலர்த்தி, கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல்உருவர், தங்கும் கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள்தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள்எருக்கும், நிறைந்த கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

வேந்துஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,
பூந்தாமநறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசைஅமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம்மூன்றும் நீள்வாய்அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்
குன்றுஎலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும்,
மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,
செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.

மேல் ஓடி விசும்பு அணவி, வியன்நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம்ஆடும் திரு ஐயாறே.

குண்டாடு குற்றுஉடுக்கைச் சமணரொடுசாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள்ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறைநாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல்
இன்இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன்அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: