2:16 திருமணஞ்சேரி

அயில் ஆரும் அம்பு அதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீற் சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாட வல்லார் வினை பாறுமே.

எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை
வைப்பான் மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்றார் வினை வீடுமே.

விடையானை மேல் உலகு ஏழும் இப்பார் எல்லாம்
உடையானை ஊழி தோறுஊழி உளதுஆய
படையானை பண்இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

எறி ஆர் பூங்கொன்றையினோடும் இளமத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

மொழியானை முன்ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண்இசை ஆன பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே.

எண்ணானை எண் அமர்சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே.

எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை
மடுத்து ஆர வண்டு இசைபாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார், பெரியோர்களே.

சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மாதவர் ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான், கழல் ஏத்துமே.

சற்றேயும் தாம்அறிவுஇல் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.

கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண் ஆரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ஆரப் பாடவல்லார்க்கு இல்லை, பாவமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: