செய்யனே, திரு ஆலவாய் மேவிய ஐயனே, அஞ்சல் என்று அருள்செய்;
சித்தனே, திரு ஆலவாய் மேவிய அத்தனே, அஞ்சல் என்று அருள்செய்;
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்சொக்கனே, அஞ்சல் என்று அருள்செய்;
சிட்டனே, திரு ஆலவாய் மேவிய அட்ட மூர்த்தியனே, அஞ்சல் என்று அருள்செய்;
நண்ணலார் மூன்று எரி ஆலவாய் அண்ணலே, அஞ்சல் என்று அருள்செய்;
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும் அஞ்சல் என்று அருள், ஆலவாய் அண்ணலே;
செங்கண் வெள்விடையாய், திரு ஆலவாய் அங்கணா, அஞ்சல் என்று அருள்செய்;
தூர்த்தனன் வீரன் தொலைத்து அருள் ஆலவாய் ஆத்தனே, அஞ்சல் என்று அருள்செய்;
தாவினான் அயன் தான் அறியா வகை மேவினாய் திரு ஆலவாய், அருள்;
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய அண்டனே, அஞ்சல் என்று அருள்செய்;
அப்பன், ஆலவாய் ஆதி, அருளினால் வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரை பத்தும் செப்ப வல்லவர், தீது இலாச் செல்வரே.