திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி
********************
2049 பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே?
2050 வானவர்-தங்கள்-கோனும் மலர்மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங் கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ்-மாலை நாலைந்து
ஊனம்-அது இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே
Advertisements