Home

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண்ஆகிய பெருமான், மலை—திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை(ம்) முழவுஅதிரும்—
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற,
ஆமாம்பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

பீலி(ம்)மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி(ம்) மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி(ம்) மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.

உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகுஎல்லாம்
எதிரும் பலி உணவுஆகவும், எருது ஏறுவதுஅல்லால்,
முதிரும் சடை இளவெண்பிறை முடிமேல் கொள, அடிமேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம்—அண்ணாமலைஅதுவே.

மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள்அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன்ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?

பெருகும் புனல் அண்ணாமலை, பிறைசேர், கடல்நஞ்சைப்
பருகும்தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார்தமக்கு உறு நோய் அடையாவே.

கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகுவெண்தலை உதையுண்டவை உருள,
எரிஆடிய இறைவர்க்கு இடம்—இளவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலைஅதுவே.

ஒளிறூ புலிஅதள்ஆடையன், உமை அஞ்சுதல்பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்துஉரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம்—அண்ணாமலைஅதுவே.

விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரைமலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்—
தளராமுலை, முறுவல்(ல்), உமை தலைவன்(ன்)—அடி சரணே!

வேர் வந்துஉற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர்வெண்மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!

வெம்பு உந்திய கதிசோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூஎயில் எய்தவன் அண்ணாமலைஅதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான-
சம்பந்தன் தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s