Home

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிராயா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்—
தண்தாமரைமலராள் உறை தவள(ந்) நெடுமாடம்
விண் தாங்குவ போலும்(ம்) மிகு—வேணுபுரம்அதுவே.

படைப்பு(ந்), நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,
கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர்—
புடைப் பாளையின் கமுகி(ன்)னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு—வேணுபுரம்அதுவே.

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்—
நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர்வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார், பயல்—வேணுபுரம்அதுவே.

தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன்தனக்கு
மிக்க(வ்) வரம் அருள்செய்த எம் விண்ணோர்பெருமான் ஊர்—
பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவுஅதிர,
மிக்க(ம்) மது வண்டு ஆர் பொழில்—வேணுபுரம்அதுவே.

நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம்மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,—
தேர் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில்—வேணுபுரம்அதுவே.

விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி(ம்) மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க(வ்), உயர்ந்தான் ஊர்—
தண் ஆர் நறுங்கமலம்மலர் சாய(வ்), இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும்—வியன் வேணுபுரம்அதுவே.

மலையான்மகள் அஞ்ச(வ்), வரை எடுத்த(வ்) வலி அரக்கன்
தலைதோள்அவை நெரியச் சரண்உகிர் வைத்தவன்தன் ஊர்—
கலைஆறொடு சுருதித்தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலைஆயின சொல்-தேர்தகு—வேணுபுரம்அதுவே.

வயம் உண்ட அ(ம்)மாலும்(ம்) அடி காணாது அலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன்படுதலை ஏந்திய பரன் ஊர்—
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்
வியல் மேவி, வந்து உறங்கும் பொழில்—வேணுபுரம்அதுவே.

மாசு ஏறிய உடலார் அமண்குழுக்க(ள்)ளொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்—
தூசு ஏறிய அல்குல்-துடிஇடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர்,—வேணுபுரம்அதுவே.

வேதத்துஒலியானும் மிகு வேணுபுரம்தன்னைப்
பாதத்தினில் மனம்வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவைபத்தும்(ம்), இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s