5:81 பாண்டிக்கொடுமுடி

1

சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்
பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி நட்டனை, தொழ, நம் வினை நாசமே.

பிரமன் மால் அறியாத பெருமையன், தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான்,
பரமனார், உறை பாண்டிக்கொடுமுடி கருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே!

ஊசலாள் அல்லள்; ஒண் கழலாள் அல்லள்; நேசம் ஆம் திருப் பாண்டிக்கொடிமுடி
ஈசன! எனும் இத்தனைஅல்லது பேசும் ஆறு அறியாள், ஒரு பேதையே.

தூண்டியச் சுடர் போல்-ஒக்கும் சோதியான்; காண்டலும் எளியான், அடியார்கட்கு;
பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக் காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.

நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர் இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திருக் கொடு(ம்)முடி என்றலும், தீவினைக் கருக் கெடும்; இது கைகண்ட யோகமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: