Home

siva-and-soul

“அவன் அவள் அது
எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே,
ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”
(சிவஞானபோதம் – நூற்பா-1)

“அவையே தானேயாய்,
இருவினையின் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அன்றே”
(சிவஞானபோதம் – நூற்பா-2)

“உளது இலது என்றலின்,
எனது உடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்,
கண்படில் உண்டி வினைஇன்மையின்,
உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா”
(சிவஞானபோதம் – நூற்பா-3)

“அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே”
(சிவஞானபோதம் – நூற்பா-4)

“விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமி யருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே” (சிவஞான போதம்-5)

“உணர் உருஅசத்து எனின், உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே” (சிவஞான போதம்-6)

“யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே அறியாது, அசத்துஇலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” (சிவஞான போதம்-7)

“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” (சிவஞான போதம்-8)

“ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி;
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்நிழல் ஆம்பதி;விதி எண்ணும் அஞ்செழுத்தே” (சிவஞான போதம்-9)

“அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க,
மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே” (சிவஞான போதம்-10)

“காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே” (சிவஞான போதம்-11)

“செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” (சிவஞான போதம்-12)
(சிவஞான போதம் முற்றும்)
மெய்கண்டார் திருவடி வாழ்க!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s