7:20 திருக்கோளிலி

1

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்!குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்!
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே!

வண்டுஅமரும்குழலாள் உமைநங்கை ஓர்பங்கு உடையாய்!
விண்டடவர்தம் புரம்மூன்று எரிசெய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர்நல்லார் வருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டிதரப் பணியே!

சொல்லுவது என், உனை நான்? தொண்டைவாய் உமைநங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

முல்லைமுறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

குரவு அமரும் குழலாள் உமைநங்கை ஒர்பங்கு உடையாய்!
பரவை பசிவருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே!

எம்பெருமான்! நுனையே நினைத்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அன்புஅது(வ்)ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

அரக்கன் முடிகரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவுஅல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்;
குரக்குஇனங்கள் குதிகொள் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
இரக்கம்அதுஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!

பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிதுஆய பிரான்!
தெண்திரைநீர் வயல் சூழ் திருக் கோளிலி என்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!

கொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி மேயவனை
நல்லவர்தாம் பரவும் திரு நாவலஊரன்அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: