1:28 சீர்காழி

1
ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;

ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,

முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி

அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்று, எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;

பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வரபுரம் ஒன்று உணர்சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;

ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

இந்தப் பதிகத்தை பாராயணம் செய்தால் தேவாரப் பதிகங்கள் முழுவதையும் படித்த பலன் கிடைக்கும்.

Published by shivayashiva

ShivaYaShiVa

1:28 சீர்காழி” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. வணக்கம்
  பக்தி சுவையூட்டும் பதிகம்… சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்…

  கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. இத் திருப்பதிகத்தை சம்பந்தப் பெருமான் சிவபெருமானை முன்னிலைப் படுத்திப் பாடியருளியுள்ளார். இதன்கண் இறைவனின் எண்ணற்ற ஆற்றல்கள் கூறப்பட்டுள்ளன. சீர்காழிப்பதியின் பன்னிரு திருப்பெயர்களும் இப்பதிகத்தில் இடம் பெற்றுள்ளன. தம் தந்தையாராகிய சிவபாத இருதயர் முதுமை காரணமாக அனைத்துப் பதிகங்களையும் ஒரே நாளில் ஓத இயலாமை குறித்து தம் தந்தையாருக்காக இத் திருப்பதிகத்தை சம்பந்தப் பெருமான் அருளிச் செய்தார். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இத் திருப்பதிகம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: