1:123 வலிவலம்

1

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திருஉரு உடையவன்—விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

இட்டம்அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவளநல்மணி என அணி பெறு
விட்டுஒளிர் திருஉரு உடையவன்—விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.

உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெருஉறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்—மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

அனல் நிகர் சடைஅழல் அவிஉற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறிஅரவமும்
என நினைவொடு வரும்இதும், மெல முடிமிசை
மனம் உடையவர்—வலிவலம் உறை இறையே.

பிடிஅதன்உரு உமை கொள, மிகு கரிஅது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்—மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவுஅது செய்து,
நரைதிரை கெடு தகைஅது அருளினன்—எழில்
வரைதிகழ் மதில் வலிவலம் உறை இறையே.

நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனைஅது புகு
பலி கொள வருபவன்—எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இர வணம் நினைதர அவன் முடி பொடிசெய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்—நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம்அதுஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்—மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

இலை மலிதர மிகு துவர்உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்—
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

மன்னிய வலிவலநகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமலநகர் இறை—எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ்விரகனது—உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: