3:60 திருவக்கரை

கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான்,
மறையவன்தன் தலையில் பலி கொள்பவன்—வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஒர்பாகம்அதா
ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன், முப்புரங்கள் எரிசெய்தவன்—வக்கரையில்
தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி செப்புதுமே.

1சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,
அந்தரமூஎயிலும்(ம்) அனல்ஆய் விழ, ஓர் அம்பினால்,
மந்தரமேரு வில்லா வளைத்தான் இடம்—வக்கரையே.

நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும்
கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்;
மெய் அணி வெண்பொடியான், விரி கோவணஆடையின், மேல்;
மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம்—வக்கரையே.

ஏனவெண்கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து,
கூன்இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல
மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்,
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள்அரவும்
நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல
வார்மலிமென்முலையாளொடும் வக்கரை மேவியவன்,
பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே.

கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள்,
தேன் அணவும் குழலாள்உமை சேர் திருமேனியினான்—
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்;
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே.

இலங்கையர்மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்க, ஒர்கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற,
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த
வலம் கெழு மூஇலைவேல் உடையான் இடம்—வக்கரையே.

காமனை ஈடு அழித்திட்டு, அவன்காதலி சென்று இரப்ப,
சேமமே, உன்தனக்கு! என்று அருள்செய்தவன்; தேவர்பிரான்;
சாம வெண்தாமரைமேல் அயனும், தரணி அளந்த
வாமனனும்(ம்),அறியா வகையான்; இடம்—வக்கரையே.

மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள்
தேடிய, தேவர்தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்;
பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல்வீதிதொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம்—வக்கரையே.

தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,
சண்பையர்தம் தலைவன்—தமிழ் ஞானசம்பந்தன்—சொன்ன
பண் புனை பாடல் வல்லார்அவர்தம் வினை பற்றுஅறுமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: