3:92 திருநெல்வேலி

1

மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தைசெய், நன்நெஞ்சமே!—
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்-
செருத்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறுஅது ஏறிச்
சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்புஅதுவே—
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து,
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

பொறி கிளர் அரவமும், போழ்இளமதியமும், கங்கை என்னும்
நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண்நீறு பூசி,
கிறிபட நடந்து, நல் கிளிமொழியவர் மனம் கவர்வர்போலும்—
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

காண் தகு மலைமகள் கதிர் நிலாமுறுவல்செய்து அருளவேயும்,
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம்ஆடல்பேணி—
ஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

ஏனவெண்கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள அரவும்,
கூனல்வெண்பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல்உடையார்;
ஆனின்நல்ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள்;—
தேனில் வண்டு அமர் பொழில்-திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

வெடிதருதலையினர்; வேனல் வெள்ஏற்றினர்; விரிசடையர்;
பொடி அணி மார்பினர்; புலிஅதள்ஆடையர்; பொங்கு அரவர்;
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல் செய்வார்—
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்; அடிகள்; அன்று,
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர்—வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்தி, மா மலர் அடி ஒருவிரல்உகிர்நுதியால் அடர்த்தார்—
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை
சிந்துபூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

பைங்கண்வாள் அரவுஅணையவனொடு பனி மலரோனும் காணாது,
அங்கணா! அருள்! என அவர்அவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்—
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

துவர் உறு விரி துகில்ஆடையர், வேடம் இல் சமணர், என்னும்
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம்—
கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல,
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே.

பெருந் தண் மா மலர்மிசை அயன்அவன் அனையவர், பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர்தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ்மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: