Home

1

தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே?
சடைமேல் கங்கைவெள்ளம் தரித்தது என்னே?
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே?
அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே?-
மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள்
வலித்து, எற்றி, முழங்கி வலம்புரிகொண்டு,
அலைக்கும் கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர்பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே?
பிறங்கும் சடைமேல் பிறை சூடிற்று என்னே?
பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே?
புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே?-
மடித்து, ஓட்டந்து, வன் திரை எற்றியிட,
வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய,
அடித்து ஆர் கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே!
சிறியார் பெரியார், மனத்து ஏறல்உற்றால்;
முந்தித்தொழுவார் இறவார்; பிறவார்;
முனிகள்முனியே! அமரர்க்கு அமரா!
சந்தித் தடமால்வரை போல்-திரைகள்
தணியாது இடறும் கடல் அம்கரைமேல்
அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால்-
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்;
இலையே ஒத்தியால்;உளையே ஒத்தியால்;
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால்;
அடியார்தமக்கு ஓர் குடியே ஒத்தியால்-
மழைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள்
வலித்து, எற்றி, முழங்கி வலம்புரிகொண்டு
அழைக்கும் கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

வீடின் பயன் என்? பிறப்பின் பயன் என்?
விடை ஏறுவது என், மதயானை நிற்க?
கூடும் மலைமங்கைஒருத்திஉடன்
சடைமேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே?
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என்?-
நிதியம்பல செய்த கலச் செலவில்
ஆடும் கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

இரவத்து இடுகாட்டு எரிஆடிற்று என்னே?
இறந்தார் தலையில் பலி கோடல் என்னே?
பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே?
பரமா, பரமேட்டி, பணித்து அருளாய்!-
உரவத்தொடு, சங்கமொடு இப்பி முத்தம்
கொணர்ந்து, எற்றி, முழங்கி வலம்புரிகொண்டு,
அரவக் கடல் அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்;
சொல்லுவார் சொல்பொருள்அவை, நீ என்பன், நான்;
நாக்கும் செவியும் கண்ணும், நீ என்பன், நான்;
நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்-
நோக்கும் நிதியம்பல எத்தனையும்
கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுங்கி
ஆர்க்கும் கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

வெறுத்தேன், மனைவாழ்க்கையை விட்டொழித்தேன்;
விளங்கும் குழைக்காது உடைவேதியனே!
இறுத்தாய், இலங்கைக்கு இறைஆயவனை,
தலைபத்தொடு தோள்பல இற்று விழ;
கறுத்தாய், கடல்நஞ்சு அமுதுஉண்டு கண்டம்;
கடுகப் பிரமன்தலை ஐந்திலும் ஒன்று
அறுத்தாய்-கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

பிடிக்குக் களிறே ஒத்தியால்; எம்பிரான்!
பிரமற்கும் பிரான்; மற்றை மாற்கும் பிரான்;
நொடிக்கும் அளவில் புரம்மூன்று எரியச்
சிலை தொட்டவனே! உனை நான் மறவேன்-
வடிக்கின்றன போல் சில வன் திரைகள்
வலித்து, எற்றி, முழங்கி வலம்புரிகொண்டு
அடிக்கும் கடல்அம்கரைமேல் மகோதை
அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!

எம்தம்(ம்) அடிகள், இமையோர்பெருமான்,
எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்,
அம் தண்கடல் அம்கரைமேல் மகோதை
அணீ ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை,
மந்தம் முழவும் குழலும் இயம்பும்
வளர் நாவலர்கோன்-நம்பிஊரன்-சொன்ன
சந்தம் மிகு தண்தமிழ்மாலைகள் கொண்டு
அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s