6:12 கழிப்பாலை

1

ஊன் உடுத்தி, ஒன்பதுவாசல் வைத்துவ்,ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்;தயக்கம்பல படைத்தார், தா(ம்)மரையினார்,
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக்கழிப்பாலை மேய கபால அப்பனார்;
வான்இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.

முறை ஆர்த்த மும்மதிலும் பொடியாச் செற்று,
முன்னும்ஆய், பின்னும்ஆய், முக்கண் எந்தை;
பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை,
பிணக்கம் தீர்த்து உடன்வைத்தார்; பெரிய நஞ்சுக்-
கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபால அப்பனார்;
மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை,
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன்தன்னை
நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்தன்னை
ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த,
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.

பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்;
புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;
அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி;
ஆன்அஞ்சும்ஆடும் ஆதிரையினார்தாம்
கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும்
கழிப்பாலை மேய கபால அப்பனார்;
மடி நாறு மேனி இம் மாயம் நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,
வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல்ஏழ் ஆனாய்!
இறை ஆனாய்! எம் இறையே! என்று நிற்கும்
கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்!
கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார்,
மண் ஆன மாயக் குரம்பை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த,
விரி கதிரோன், எரி சுடரான், விண்ணும் ஆகி,
பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும்
பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி;
கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்
கழிப்பாலை மேய கபால அப்பனார்;
வண்ணப் பிணி மாயயாக்கை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
பேதப்படுகின்ற பேதைமீர்காள்!
நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்;
எண்தோளர்; எண் நிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார்
கழிப்பாலை மேய கபால அப்பனார்;
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை,
என் சிந்தை மேவி உறைகின்றானை,
முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம்ஆன
தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபால அப்பனார்;
மயல் ஆய மாயக் குரம்பை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து,
சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்
உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம்எல்லாம்
காட்டுவான்; உத்தமன்தான்; ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன்
புட்பகம்தான் பொருப்பின்மீது ஓடாதுஆக,
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,
ஏந்திழையாள்தான் வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு
கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: