3:4 திருவாவடுதுறை

1

இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்? ஆவடுதுறை அரனே!

வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன்அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ்இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்;அம்மான்!
புனல் விரிநறுங்கொன்றைப்போது அணிந்து,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர்அடிஅலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

கையது வீழினும், கழிவுஉறினும்,
செய் கழல் அடிஅலால் சிந்தைசெய்யேன்;
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

வெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்,
எந்தாய்! உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலைஅரவுகொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண்மலர்அடிஅலால் உரையாது, என் நா;
கண்ணனும், கடி கமழ் தாமரைமேல்
அண்ணலும், அளப்பு அரிதுஆயவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன்உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும்ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்அருள்?ஆவடுதுறை அரனே!

அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினைஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன்உலகம்
நிலைஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: