Home

1

வாடிய வெண்தலைமாலை சூடி, வயங்கு இருள்,
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லைஆம், பாவமே.

துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண்நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை
உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே.

உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன்தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள்ஆகவே.

காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே.

போர்த்ததுவும் கரியின்(ன்)உரி; புலித்தோல், உடை;
கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு
ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
பார்த்ததுவும்(ம்) அரணம், படர்எரி மூழ்கவே.

தெரிந்ததுவும் கணை ஒன்று; முப்புரம், சென்று உடன்-
எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர்உறைவான் தலை,
அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே.

ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்-
சோதி! என்று தொழுவார்அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தாயான்பள்ளியை
நீதியால்-தொழுவார்அவர் வினை நீங்குமே.

செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,
ஒறுத்ததுவும்; ஒளி மா மலர்உறைவான் சிரம்,
அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்தன் தோள்கள்இருபதே.

சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,
அரவும், மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார்அவர்தங்கள்மேல் வினை பாறுமே.

செந்துவர்ஆடையினாரும், வெற்று அரையே திரி
புந்திஇலார்களும், பேசும் பேச்சுஅவை பொய்ம்மொழி;
அந்தணன், எங்கள் பிரான், அகத்தியான்பள்ளியைச்
சிந்திமின்! நும் வினைஆனவை சிதைந்து ஓடுமே.

ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள்,
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர்தங்கள் மேல் வினை மாயுமே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s