4:79 நாவுக்கரசர்

1

தன் மானம் காப்பது ஆகித் தையலார்வலையுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன்தன்னை, ஆதியை, அந்தம்ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை, நினைய மாட்டேன்; என் செய்வான் தோன்றினேனே!

மக்களே, மணந்த தாரம், வல்வயிற்றஅவரை, ஓம்பும்
சிக்குறே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம்அது ஒரேன்;
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்,
இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே!

கூழையேன் ஆகமாட்டேன், கொடுவினைக்குழியில் வீழ்ந்து;
ஏழின் இன்இசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன்;
மாழைஒண்கண்ணின் நல்ல மடந்தைமார்தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே!

முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன்;
பின்னை நான் பித்தன்ஆகிப் பிதற்றுவன், பேதையேன்நான்;
என் உளே மன்னி நின்ற சீர்மைஅது ஆயினானை
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

கறை அணி கண்டன்தன்னைக் காமரம் கற்றும்இல்லேன்;
பிறைநுதல் பேதைமாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்;
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய
தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்-
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவுஇலாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: