Home

1

வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்,
கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர்,
தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம்,
வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே.

அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை,
கொண்டல்நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே.

மூலனூர், முதல்ஆய முக்கண்ணன் முதல்வனூர்,
நாவனூர், நரைஏறு உகந்து ஏறிய நம்பன், ஊர்
கோலம் நீற்றன் குற்றாலம், குரங்கணில் முட்டமும்,
வேலனூர், வெற்றியூர், வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே.

தேங்கூரும், திருச் சிற்றம்பலமும், சிராப்பள்ளி,
பாங்கு ஊர், எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை,
பூங்கூரும், பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூரே.

குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம்,
மழலை ஏற்று, மணாளன் இடம் தடமால்வரைக்
கிழவன் கீழைவழி, பழையாறு, கிழையமும்,
மிழலைநாட்டு மிழலை, வெண்ணி நாட்டுப் புரிசையே.

தென்னூர், கைம்மைத் திருச் சுழியல், திருக் கானப்பேர்,
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம், பாய் நலம்
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திருத் தேவனூர்,
பொன்னூர்நாட்டுப் பொன்னூர், புரிசைநாட்டுப் புரிசையே.

ஈழநாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம்,
சோழநாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை,
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய
கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளிகுடிஅதே.

நாளும் நன்னிலம், தென்பனையூர், வடகஞ்சனூர்,
நீளநீள்சடையான் நெல்லிக்காவு, நெடுங்களம்,
காளகண்டன் உறையும் கடைமுடி, கண்டியூர்,
வேளார்நாட்டு வேளூர், விளத்தூர்நாட்டூ விளத்தூரே.

தழலும் மேனியன், தையல் ஓர்பாகம் அமர்ந்தவன்,
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன், காதலிக்கும்  இடம்
பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கையே.

மை கொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணன், வலஞ்சுழி
பை கொள் வாள்அரவு ஆட்டித் திரியும் பரமன், ஊர்
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திருப் புன்கூர், நன்று
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே.

பேணி நாடுஅதனில் திரியும் பெருமான்தனை,
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை,
நாணி, ஊரன் வனப்பகைஅப்பன், வன்தொண்டன் சொல்
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s