Home

1பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப்பாவை ஓர்
கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ? சுடுபொடியரோ? இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடைரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

இட்டிதுஆக வந்து உரைமினோ! நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர்!
கட்டி வாழ்வது நாகமோ? சடைமேலும் நாறு கரந்தையோ?
பட்டி ஏறு உகந்து ஏறரோ? படுவெண்தலைப் பலி கொண்டு வந்து
அட்டி ஆளவும் கிற்பரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

ஒன்றினீர்கள், வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
குன்றி போல்வது ஓர் உருவரோ? குறிப்புஆகி நீறு கொண்டு அணிவரோ?
இன்றியே இலர் ஆவரோ? அன்றி உடையராய் இலர் ஆவரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

தேனை ஆடு முக்கண்ணரோ? மிகச் செய்யரோ? வெள்ளைநீற்றரோ?
பால்நெய்ஆடலும் பயில்வரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ?
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கைநங்கையை அஞ்ச, ஓர்
ஆனைஈர்உரி போர்ப்பரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

கோணல்மாமதி சூடரோ? கொடுகொட்டி, காலர்கழலரோ?
வீணைதான் அவர் கருவியோ? விடை ஏறு வேதமுதல்வரோ?
நாண்அதுஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ? நலம் ஆர்தர
ஆணைஆக நம் அடிகளோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து ஏத்துவீர்!
வந்த சாயினை அறிவரோ? தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ?
புந்தியால் உரை கொள்வரோ? அன்றிப் பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

மெய் என்? சொல்லுமின், நமரங்காள்! உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
கையில் சூலம்அது உடையரோ? கரிகாடரோ? கறைக்கண்டரோ?
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ? விடை ஏறரோ? கடைதோறும் சென்று
ஐயம் கொள்ளும் அவ் அடிகளோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

நீடு வாழ் பதி உடையரோ? அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ?
பாடுவாரையும் உடையரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ?
காடுதான் அரங்கு ஆகவே, கைகள்எட்டினோடு இலயம் பட,
ஆடுவார் எனப்படுவரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

நமணநந்தியும், கருமவீரனும், தருமசேனனும், என்று இவர்
குமணமாமலைக்குன்று போல் நின்று, தங்கள் கூறை ஒன்று இன்றியே,
ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா
அமணரால் பழிப்பு உடையரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்!
வடிவுஇலான் திரு நாவலூரான் வனப்பகைஅப்பன், வன்தொண்டன்,
செடியன்ஆகிலும் தீயன்ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன் ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள்ஆகிய அடிகளே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s