Home

1நெற்றிமேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப்புன்சடையினானே! கடல்விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள்மூன்றும் செவ்அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!

கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே!
வடிவுஉடைமங்கைதன்னை மார்பில் ஓர்பாகத்தானே!
அடிஇணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே!
கொடி அணி விழவுஅது ஓவாக் கோடிகா உடைய கோவே!

நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே!
ஏறு உகந்து ஏறினானே! இருங்கடல் அமுது ஒப்பானே!
ஆறும் ஓர்நான்குவேதம் அறம் உரைத்து அருளினானே!
கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே!

காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே!
நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே!
ஞாலம் ஆம் பெருமையானே! நளிர்இளந்திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!

பூண் அரவுஆரத்தானே! புலிஉரி அரையினானே!
காணில் வெண்கோவண(ம்)மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி,
ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒருபாகத்தானே!
கோணல்வெண்பிறையினானே! கோடிகா உடைய கோவே!

கேழல்வெண்கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே!
ஏழையேன்ஏழையேன்நான் என் செய்கேன்? எந்தைபெம்மான்!
மாழைஒண்கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்;
கூழைஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!

அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர்பாகத்தானே!
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனில் பலி கொள்வானே!
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரிவண்டுஇனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே!

ஏ அடு சிலையினாலே புரம்அவை எரிசெய்தானே!
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே!
ஆவடுதுறை உளானே! ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!

ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர்மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல்உற்றார்க்கு அழல்உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்றுஅது ஆனாய்! கோடிகா உடைய கோவே!

பழக நான் அடிமை செய்வேன்—பசுபதீ! பாவநாசா!
மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே! அரக்கன் திண்தோள் அரு வரை நெரிய ஊன்றும்
குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s