Home

1

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில்பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில்கண்டீர், இளங்கோயிலே.

வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீணச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே.

பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச ஆனை உரித்து அனல்ஆடுவார்,
நெஞ்சம்! வாழி நினைந்து இரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே!

நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறுவேறு விரித்த சடைஇடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,
செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர்,
எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?

பொன்அம்கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

படை கொள் புதத்தன், பைங்கொன்றைத்தாரினன்,
சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண்நீற்றினன்,
விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர்,
இடைகொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.

ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறுகொண்டது ஒர் வேடத்தர்ஆகிலும்,
கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

வேதத்தான் என்பர், வேள்விஉளான் என்பர்,
பூதத்தான் என்பர், புண்ணியன்தன்னையே;
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்,
ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

கடுக்கண்டன் கயிலாயமலைதனை
எடுக்கல்உற்ற இராவணன் ஈடு அற
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s