6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;

1

கரு மணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;
கல்லால்நிழல்கீழ் இருந்தான் கண்டாய்;
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்;
பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
மாதேவன்கண்டாய்; வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

கலைக்கன்று தங்கு கரத்தான்கண்டாய்;
கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய்;
அலைக் கங்கை செஞ்சடைமேல் ஏற்றான்கண்டாய்;
அண்ட கபாலத்து அப்பாலான்கண்டாய்;
மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியில் மேவிய மைந்தன்கண்டாய்
குலைத்தெங்குஅம்சோலை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

செந்தாமரைப்போது அணிந்தான்கண்டாய்;
சிவன்கண்டாய்; தேவர்பெருமான்கண்டாய்;
பந்துஆடுமெல்விரலாள் பாகன்கண்டாய்;
பாலோடு, நெய், தயிர், தேன், ஆடிகண்டாய்;
மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியில் மன்னும் மணாளன்கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

பொடிஆடும் மேனிப் புனிதன்கண்டாய்;
புள்பாகற்கு ஆழி கொடுத்தான்கண்டாய்;
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான்கண்டாய்;
எண்திசைக்கும் விளக்குஆகி நின்றான்கண்டாய்;
மடல் ஆர் திரை புரளும் காவிரீவாய்
வலஞ்சுழியில் மேவிய மைந்தன்கண்டாய்
கொடி ஆடு நெடுமாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான்கண்டாய்;
அருமறைகள் ஆறுஅங்கம் ஆனான்கண்டாய்;
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான்கண்டாய்;
சதாசிவன்காண்; சலந்தரனைப் பிளந்தான்கண்டாய்;
மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியான்கண்டாய்; மழுவன்கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான்கண்டாய்;
சதாசிவன்கண்டாய்; சங்கரன்தான்கண்டாய்;
தொண்டர்பலர் தொழுது ஏத்தும் கழலான்கண்டாய்;
சுடர்ஒளிஆய்த் தொடர்வு அரிதுஆய் நின்றான்கண்டாய்;
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான்கண்டாய்;
மா முனிவர்தம்முடைய மருந்துகண்டாய்
கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

அணவு அரியான்கண்டாய்; அமலன்கண்டாய்;
அவிநாசிகண்டாய்;அண்டத்தான்கண்டாய்;
பண மணி மா நாகம் உடையான்கண்டாய்;
பண்டரங்கன்கண்டாய்; பகவன்கண்டாய்;
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்கண்டாய்;
மாதவற்கும் நான்முகற்கும் வரதன்கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

விரை கமழும் மலர்க்கொன்றைத்தாரான்கண்டாய்;
வேதங்கள் தொழ நின்ற நாதன்கண்டாய்;
அரைஅதனில் புள்ளிஅதள்உடையான்கண்டாய்;
அழல்ஆடிகண்டாய்; அழகன்கண்டாய்;
வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்கண்டாய்;
வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன்கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

தளம் கிளரும் தாமரைஆதனத்தான்கண்டாய்;
தசரதன்தன்மகன் அசைவு தவிர்த்தான்கண்டாய்;
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான்கண்டாய்;
எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான்கண்டாய்;
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்கண்டாய்;
மா முனிகள் தொழுது எழு பொன்கழலான்கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

விண்டார் புரம்மூன்று எரித்தான்கண்டாய்;
விலங்கலில் வல்அரக்கன் உடல் அடர்த்தான்கண்டாய்;
தண்தாமரையானும், மாலும், தேடத்
தழல்பிழம்புஆய் நீண்ட கழலான்கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான்கண்டாய்;
மாதேவன்கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: