Home

நான் இனி இந்த பூமியில் பிரிக்கக்கூடாது
என்பதற்காக, ஏன் இதய தாமரையில்
வீற்றிருக்கும் சிவனை வணங்குகின்றேன்.

சிரத்தை பக்தி ஆகிய நதிகளிலிருந்து
கொண்டு வரப்பட்ட நீரான ஏன் தூய மனதால்
சிவனுக்கு அபிஷேகம் செய்கிறேன்.

சமாதி என்னும் நறுமண பூக்களால்
நான் சிவனை வழிபடுகிறேன் .

சிவனே எனது ஆத்மா
என் மனமே பார்வதி.
என் பிராணனே சிவ சேவகன்.
என் உடலே சிவன் வீடு.
என் செயல்கள் அனைத்தும் சிவ வழிபாடு.
என் உறக்கம் சமாதி.
என் நடையே சிவனை சுற்றிவரும் பிரதட்சணம்.
என் பேச்சே சிவ பிரார்த்தனை.

இவ் விதமாக நன் எனைக்குள் இருக்கும்
அனைத்தையும் சிவனிடம் அர்ப்பனிக்கின்றேன்.
************************************************
மாகேசுவர பூஜை
************************************************
அநாதி முதற்பெருங்கடவுளாகிய சிவபெருமான் உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுத் திருமேனி தாங்கி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்கள் அனைத்திலும், நித்திய நைமித்திக வழிபாடுகளெல்லாம் வேத சிவாகமப்படி சிறப்பாக நடந்துவரும் பொருட்டு
அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

விபூதி, உருத்திராக்கதாரணம், பஞ்சாட்சர ஜபம், வேத சிவாகமப்படனம், தேவாரத் திருமுறைப் பாராயணம், ஆன்மார்த்த சிவபூஜை ஆகிய சிவபுண்ணியச் செயல்கள் நாடெங்கும் பரவி ஓங்கும் பொருட்டு
அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

மாதம் மும்மழை தவறாமல் பெய்து, தான்யம் முதலிய எல்லா வளங்களும் செழித்தோங்கும் பொருட்டு
அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

அரசநீதி தவறாமல் செங்கோல் நடத்தி வரும் பொருட்டு அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

இந்தத் தானத்திலே எப்போதும் அடியார்களுக்கு மாகேஸ்வர பூஜை நடந்துவரும் பொருட்டு வளங்களையளித்து
அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

சிவபூசைச் செல்வர் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தார், உறவினர் ஆகியோர்களுக்கும் நோயற்ற வாழ்வும், நிறைவான செல்வமும், தேக ஆரோக்கியமும், நீளாயுளும், குருலிங்கசங்கம பக்தியும், சிவஞானமும், மேன்மேலும் பெருக
அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

அடியேங்களுக்கு நல்லபுத்தி உண்டாகும்பொருட்டு
அநுக்ரஹம் செய்க – ஹரஹர சிவசிவ ஹரஹர

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s