பெரியாழ்வார் திருமொழி – தாலப் பருவம் மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ (1) உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும் விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ (2) என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு“தாலப் பருவம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Author Archives: shivayashiva
கண்ணண் மேனியழகு
முதல் ஆயிரம் – பெரியாழ்வார் திருமொழி கண்ணனது திருமேனியழகு சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்து ஆர“கண்ணண் மேனியழகு”-ஐ படிப்பதைத் தொடரவும்.
காரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்
1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால் 2. வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர் தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால் அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து பொங்கிய பேர் அழகு மிகப்“காரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
கண்ணப்பநாயனார் [திண்ணன்] புராணம்
650. மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற பூவலர் வாவி சோலை சூழ்ந்தபொத் தப்பி நாடு. 651. இத்திரு நாடு தன்னில் இவர்திருப் பதியா தென்னில் நித்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர் மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலி கோலி ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும். 652. குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி“கண்ணப்பநாயனார் [திண்ணன்] புராணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
திருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்
1. பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும் திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும் அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர் 2. நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர் ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச் சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும்“திருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
திருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து
திருச்சிற்றம்பலம்!!! 226. பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லை யுள்திரு நடம்புரி கின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. 227. ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச் செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே. 228. அலந்து“திருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து”-ஐ படிப்பதைத் தொடரவும்.
திருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்!
திருச்சிற்றம்பலம்!!! 215. மையல் மாதொரு கூறன் மால்விடையேறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரையும் கறைக்கண்டன் கனல் மழுவான் ஐயன் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே. 216. சலம்பொற்றாமரை தாழ்ந்தெழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ அலம்பி வண்டறையும் அணியார் தில்லை அம்பலவன் புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல் சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே. 217. குருண்ட வார்குழல் கோதை மார்குயில்போன்மிழற்றிய கோல மாளிகை திரண்ட“திருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
வேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்
திருச்சிற்றம்பலம்!!! 205. துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார் கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 206. தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன் வம்பானார் பணிஉகத்தி வழியடியேன் தொழிலிறையும் நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 207. பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத் திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும் இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள் நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 208. ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாவித் தொழும்பனைத்தம்பிரான் இகழும் என்பித்தாய் நாயேனைத்“வேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
கண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்
திருச்சிற்றம்பலம்!!! 195. மின்னார் உருவம் மேல் விளங்க வெண்கொடி மாளிகைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் என்னார் அமுதை எங்கள் கோவை என்று கொல் எய்துவதே ? 196. ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர் ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார் மூவா யிரவர் தங்க ளோடு முன்அரங்(கு) ஏறிநின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று“கண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
பூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்
திருச்சிற்றம்பலம்!!! 185. முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல் தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 186. கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி மூவாயி ரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத் தாடினையே. 187. அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக் கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச் செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. 188. எம்பந்த“பூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்”-ஐ படிப்பதைத் தொடரவும்.