கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்!

திருச்சிற்றம்பலம்!!! 122. நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்றே ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று) ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 123. நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 124. அம்பளிங்கு பகலோன்பால் அடைப்பற்றாய் இவள்மனத்தில் முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால் வம்பளிந்த கனியே ! என் மருந்தே !நல் வளர்முக்கண் செம்பளிங்கே !“கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே ! அகவுயிர்க்கு அமுதே!

திருச்சிற்றம்பலம்!!! 112. புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா ! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா ! அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே. 113. புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும் முகத்தலை“கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே ! அகவுயிர்க்கு அமுதே!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…

திருச்சிற்றம்பலம்!!! 101. தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச் சடைவிரித்(து) அலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக் கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. 102. துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளமாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள்நின்“கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…

 திருச்சிற்றம்பலம்!!! 91. கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத்(து) அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 92. சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய திருநுதல் அவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு) எரிவதொத்(து) எழுநிலை மாடம் அந்தணர் அழலோம்(பு) அலைபுனற்“கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி

திருச்சிற்றம்பலம்!!! 80. கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணல் கட்செவிப் பகுவாய்ப் பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தம் கோவில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில் மழைதவழ் வளரிளம் கமுகம் திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 81. இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை என்றால் அஞ்சல்என் றருள்செய்வான் கோயில் கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக் கடைசியர் களைதரு நீலம் செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப்“கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்!

திருச்சிற்றம்பலம்!!! 69. மாலுலா மனம்தந்(து) என்கையிற் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை வேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என்மெல்லியல் இவளே. 70. இவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்க எழில் கவர்ந் தான்இளங் காளை கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவரும் கள்வன் திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண்“சேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் !

திருச்சிற்றம்பலம் 58. பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய ஐயா ! திருவா வடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால் மையார் தடங்கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே. 59. மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ் சோட மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும் ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பிநின்ற நீதி அறிகிலன் பொன்நெடும் திண்தோள் புணர நினைக்குமே. 60.“சேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் !”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை!

திருச்சிற்றம்பலம் 46. ஏக நயகனை இமையவர்க்(கு) அரசை என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில் போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநா யகனை மிகுதிரு வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில் யோகநா யகனை அன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே. 47. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு)“சேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்

திருச்சிற்றம்பலம்!!! 35. இணங்கிலா ஈசன் நேசத்து இருந்தசித் தத்தி னேற்கு மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப் பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே. 36. எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி விட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே. 37. அருள்திரள் செம்பொன் சோதி“திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்

  திருச்சிற்றம்பலம்!!! 23. உறவா கியயோ கமும்போ கமுமாய் உயிராளி என்னும்என் பொன்னொருநாள் கிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற மறவா என்னும் மணிநீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும் குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 24. காடாடு பல்கணம் சூழக் கேழற் கடும்பின் நெடும்பகற் கான்நடந்த வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும் வினையேன் மடந்தைவிம் மாவெருவும் சேடா என்னும் செல்வர்மூ வாயிரம் செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும்“திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.