1:39 சம்பந்தர்; திருவேட்களம் : அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்

அந்தமும் ஆதியும்ஆகிய அண்ணல் ஆர்அழல் அங்கை அமர்ந்து இலங்க; மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி; சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப; வெந்தவெண்நீறு மெய் பூசும் வேட்கள நன்நகராரே. சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்கவெண்தோடு சரிந்து இலங்க, புடைதனில் பாரிடம் சூழ, போதரும்ஆறு இவர்போல்வார் உடைதனில் நால்விரல்கோவணஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை- விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்நகராரே. பூதமும் பல்கணமும் புடைசூழ, பூமியும் விண்ணும்“1:39 சம்பந்தர்; திருவேட்களம் : அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

1:1 சீர்காழி

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! முற்றல்ஆமை இள நாகமொடு ஏனமுளைக்கொம்பு அவை பூண்டு, வற்றல்ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன் கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம்“1:1 சீர்காழி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

1:24 சீர்காழி

பூ ஆர் கொன்றைப் புரிபுன்சடை ஈசா! காவாய்! என நின்று ஏத்தும் காழியார், மேவார் புரம்மூன்று அட்டார்அவர்போல்ஆம் பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே. எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி, கந்தமாலைகொடு சேர் காழியார், வெந்தநீற்றர், விமலர்அவர்போல்ஆம் அந்தி நட்டம்ஆடும் அடிகளே. தேனை வென்ற மொழியாள் ஒருபாகம், கானமான் கைக் கொண்ட காழியார், வானம் ஓங்கு கோயிலவர்போல்ஆம் ஆனஇன்பம்ஆடும் அடிகளே. மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக்கு அளித்த காழியார், நாண் ஆர்“1:24 சீர்காழி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

1:6 திருமருகல்

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ, மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள் கங்குல் விளக்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? நெய் தவழ் மூஎரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த, மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செய் தவ நால்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள்“1:6 திருமருகல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

1:46 திருவதிகை வீரட்டானம்

குண்டைக் குறள்பூதம் குழும, அனல் ஏந்தி, கெண்டை பிறழ் தெண்நீர்க் கெடில வடபக்கம், வண்டு மருள் பாட, வளர் பொன்விரி கொன்றை விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே. அரும்பும் குரும்பையும் அலைத்த மென்கொங்கைக் கரும்புஇன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி, சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர்பொன்சடை தாழ, விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே. ஆடல் அழல்நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட, பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான், மாட முகட்டின்மேல் மதி தோய் அதிகையுள்,“1:46 திருவதிகை வீரட்டானம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

3:92 திருநெல்வேலி

மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்; அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தைசெய், நன்நெஞ்சமே!— பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்- செருத்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே. என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறுஅது ஏறிச் சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்புஅதுவே— துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து, தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே. பொறி“3:92 திருநெல்வேலி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

3:60 திருவக்கரை

கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான், பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான், மறையவன்தன் தலையில் பலி கொள்பவன்—வக்கரையில் உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே. பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஒர்பாகம்அதா ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச வாய்ந்தவன், முப்புரங்கள் எரிசெய்தவன்—வக்கரையில் தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி செப்புதுமே. சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில் இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச, அந்தரமூஎயிலும்(ம்)“3:60 திருவக்கரை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

1:123 வலிவலம்

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்; ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள் மேவிய திருஉரு உடையவன்—விரைமலர் மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே. இட்டம்அது அமர் பொடி இசைதலின், நசை பெறு பட்டு அவிர் பவளநல்மணி என அணி பெறு விட்டுஒளிர் திருஉரு உடையவன்—விரைமலர் மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே. உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் வெருஉறு வகை எழு விடம், வெளிமலை“1:123 வலிவலம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

3:52 ஞானசம்பந்தன்

வீடுஅலால் அவாய்இலாஅய், விழுமியார்கள் நின்கழல் பாடல் ஆலவாய்இலாய்! பரவ நின்ற பண்பனே! காடுஅலால் அவாய்இலாய்! கபாலி! நீள்கடி(ம்)மதில் கூடல்ஆலவாயிலாய்!—குலாயது என்ன கொள்கையே? பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா, கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல்ஆலவாயிலாய்! எட்டு இசைந்த மூர்த்தியாய்!—இருந்தஆறுஇது என்னையே? குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல்ஆலவாயிலாய்! சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ! கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை“3:52 ஞானசம்பந்தன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

1:28 சீர்காழி

ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை; இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை. ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை இருநதி அரவமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம் நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம் ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை“1:28 சீர்காழி”-ஐ படிப்பதைத் தொடரவும்.