7:47 சுந்தரர் நாயனார்

காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுத்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மா(ட்)டு ஊர் அறவா!—மறவாது உன்னைப் பாடப் பணியாயே! கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய்! குழகா! குற்றாலா! மங்குல்-திரிவாய்! வானோர்தலைவா! வாய்மூர் மணவாளா! சங்கக்குழை ஆர் செவியா! அழகா! அவியா! அனல் ஏந்திக் கங்குல் புறங்காட்டுஆடீ!—அடியார் கவலை களையாயே! நிறைக் காட்டானே! நெஞ்சகத்தானே! நின்றியூரானே! மிறை(க்) காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர்“7:47 சுந்தரர் நாயனார்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

7:48 பாண்டிக்கொடுமுடி

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெ(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்கொடுமுடி நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே. இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள், கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி வட்டவாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி நட்டவா! உனை நான் மறக்கினும்“7:48 பாண்டிக்கொடுமுடி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமச்சிவாயப் பதிகம்

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே. இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள், கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா!“நமச்சிவாயப் பதிகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருமுருகன்பூண்டி

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னோடும் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே வில்லைக் காட்டிவெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க் கொலை“திருமுருகன்பூண்டி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

3:4 திருவாவடுதுறை

இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்; கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே. வாழ்வினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்; தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே. இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது வோ உனது“3:4 திருவாவடுதுறை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

7:74 திருத்துருத்தி

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக்கரை யொடுந்திரை கொணந்தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் அடியினை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே பொருது மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்“7:74 திருத்துருத்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

7:34 திருப்புகலூர்

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே; எந்தை புகலூர் பாடுமின்; புலவீர்காள் இம்மையே தரும் சோறும் கூறையும், ஏத்தலாம்இடர் கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. மிடுக்கு இலாதானை வீமனே, விறல் விசயனே, வில்லுக்கு இவன் என்று கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை; பொடிக்கொள் மேனி, எம் புண்ணியன், புகலூரைப் பாடுமின் புலவீர்காள்; அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. காணியேல்“7:34 திருப்புகலூர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

7:44 முடிப்பது கங்கை

முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூஎயில்; நொடிப்பதுமாத்திரை நீறு எழக் கணை நூறினார்; கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே? தூறு அன்றி ஆடுஅரங்கு இல்லையோ? சுடலைப் பொடி- நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான்மகள் கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்- ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே? தட்டுஎனும் தட்டுஎனும்,—தொண்டர்காள்!—தடுமாற்றத்தை,— ஒட்டுஎனும் ஒட்டுஎனும் மா நிலத்து—உயிர் கோறலை; சிட்டனும், திரிபுரம் சுட்ட“7:44 முடிப்பது கங்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

3:78 திருவேதிக்குடி

நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம் ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம் தாறுவிரி பூகம்மலி வாழை விரை நாறஇணை வாளை மடுவில் வேறுபிரியாது விளையாட வளம் ஆறும் வயல் வேதிகுடியே. சொற்பிரிவு இலாதமறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும்வளர் வானவர் தொழத் துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர் இயன்ற தொகுசீர் வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர் என்பர்திரு“3:78 திருவேதிக்குடி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

7:25 விருத்தாச்சலம்

பொன் செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன்செய்த மூஎயிலும் எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின்செய்த நுண்இடையாள் பரவை இவள்தன் முகப்பே, என்செய்தவாறு அடிகேள், அடியேன் இட்டளம் கெடவே. உம்பரும் வானவரும் உடனே நிற்கவே, எனக்குச் செம்பொனைத் தந்தருளித், திகழும் முதுகுன்று அமர்ந்தீர் வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்; எம்பெருமான், அருளீர்; அடியேன் இட்டளம் கெடவே. பத்தா, பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே, முத்தா, முக்கணனே, முதுகுன்றம் அமர்ந்தவனே, மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள்“7:25 விருத்தாச்சலம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.